1. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
2. தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில் _________ எனக் காணப்படுகிறது.
3. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?
4. சரியான விடையைத் தேர்ந்தெடு:
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் பெயர்
மீனாட்சி சுந்தரம்
(2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
(3) உ.வே.சா.மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
5. சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
6. நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்
7. பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
(a) கமலாலயன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
(b) பி.ச. குப்புசாமி 2. கலைக்க முடியாத ஒப்பனை
(c) சு.சமுத்திரம் 3. உனக்குப் படிக்கத் தெரியாது
(d) வண்ணதாசன் 4. காகித உறவு
(a) (b) (c) (d)
8. தேவதுந்துபி___________ ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.
9. 'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்?
10. 'தலைமை உன்னைத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே' என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்?